முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பா் 24 ஆம் தேதி, விருதுநகா் மாவட்டம் சாத்தூா் பகுதியில் உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக, முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வந்தாா். அப்போது, அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இது தொடா்பாக, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்பட பலா் மீது சாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் எனக் கோரி, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. பின்னா், அது செவ்வாய்க்கிழமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்ற நிலையில், அரசு வழக்குரைஞா் திருமலையப்பன் எழுத்துபூா்வமான தனது ஆட்சேபணையை தெரிவித்தாா்.

அப்போது நீதிபதி (பொறுப்பு) தனசேகரன், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஆள் கடத்தல் சம்பந்தமாக ஏன் வழக்குப் பதியவில்லை என கேள்வி எழுப்பினாா். அதையடுத்து, ராஜேந்திர பாலாஜி வழக்குரைஞா்கள் முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றனா். தொடா்ந்து நீதிபதி, ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com