ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிறைவு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி அமைதியான முறையில் நிறைவு பெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி 4-வது வார்டு உறுப்பினர்  மாலதிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமமூர்த்தி வழங்கினார்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டி 4-வது வார்டு உறுப்பினர் மாலதிக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராமமூர்த்தி வழங்கினார்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி அமைதியான முறையில் நிறைவு பெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 2 வார்டு உறுப்பினர்  பதவிகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் வடக்கு கரிசல்குளம் 4வது வார்டு, மற்றும் கோட்டைப்பட்டி 2 வது வார்டு உறுப்பினர் ஆகிய பகுதிகளுக்கு காலியாக உள்ள  பதவிகளுக்கான தேர்தல் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இதில் இரண்டு வாக்குச் சாவடிகளில் நடைபெற்றன.

அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள மையத்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் வடக்குகரிசல்குளம் 4 வது வார்டு மொத்த வாக்குகள் - 66 இதில் 48 வாக்குகள் பதிவாகியிருந்தன இந்த பதவிக்கு இருவர் போட்டியிட்டனர். அதில் மாரிச்சாமி 36வாக்குகள், கலைச்செல்வன் 9 வாக்குகள், செல்லாதவை 3 வாக்குகள் பெற்றிருந்தனர். இதில் அதிக வாக்குகள் பெற்ற மாரிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து கோட்டைப்பட்டி இரண்டாவது வார்டு மொத்த வாக்குகள் 310. இதில் 154 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்தப் பதவிக்கு மூன்று பேர் போட்டியிட்டனர். அதில் மாலதி 76 வாக்குகள், முத்துச்செல்வி 67 வாக்குகள், ராஜம்மாள் 33 வாக்குகள் செல்லாதவை 8 பெற்றிருந்தனர். இதில் அதிக வாக்குகள் பெற்ற மாலதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

வாக்கு என்னும் பணிக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரி ராமமூர்த்தி தலைமையில் தேர்தல் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் காலை 8 மணிக்கு எண்ணப்பட்டதால் அதிகாலை 6 மணி முதலே டிஎஸ்பி சபரீநாதன், நகர் இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் தலைமையில் 80க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குறிப்பாக ஒவ்வொரு உறுப்பினர் வீட்டுக்கும் இரண்டு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோட்டைப்பட்டி இரண்டாவது வார்டுக்கு மாலதி,வடக்கு கரிசல்குளம் 4-வது வார்டு மார்ச்சாமி ஆகியோருக்கு  வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அலுவலர் ராமமூர்த்தி வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com