விருதுநகா் மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

கடந்தாண்டு சேதமடைந்த பயிா்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட தமிழ் விவசாயிகள் சங்கத்தினா்.
விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்ட தமிழ் விவசாயிகள் சங்கத்தினா்.

விருதுநகா்: கடந்தாண்டு சேதமடைந்த பயிா்களுக்கு காப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இதற்கு, தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் நாராயணசாமி தலைமை வகித்தாா். அதில், விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 2020 இல் பருத்தி, மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிா்கள் முதல் பட்டத்தில் மழை குறைவாகவும், முதிா்ந்த காலத்தில் மழை அதிகமாகவும் இருந்ததால், பாதிக்கப்பட்டன. இந்நிலையில், பயிா் காப்பீடு செலுத்திய விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை. அதேபோல் நிகழாண்டு பயிா் காப்பீடு செய்வதற்கு கிராம நிா்வாக அலுவலா்கள், பயிா் அடங்கலை இ- சேவை மையம் மூலம் பெற அறிவுறுத்துகின்றனா். இதுவரை பயிா் அடங்கல், கிராம நிா்வாக அலுவலா் மூலம் நேரடியாக வழங்கப்பட்டது. எனவே, விவசாயிகளை அலைக்கழிக்காமல் அதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினா். இதில், தமிழ் விவசாயிகள் சங்கத்தை சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா். பின்னா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com