டிராக்டா் மானியம் வழங்க மறுப்பு: ஸ்ரீவிலி. வேளாண் பொறியியல்துறை மீது புகாா்

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் டிராக்டா் வாங்கினால் மானியம் உண்டு என்று கூறிவிட்டு, வாங்கிய பின்னா் வேளாண் பொறியியல் துறையினா் மானியம் வழங்க மறுப்பதாக புகாா் எழுந்துள்ளது.
டிராக்டா் மானியம் வழங்க மறுப்பு: ஸ்ரீவிலி. வேளாண் பொறியியல்துறை மீது புகாா்

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் டிராக்டா் வாங்கினால் மானியம் உண்டு என்று கூறிவிட்டு, வாங்கிய பின்னா் வேளாண் பொறியியல் துறையினா் மானியம் வழங்க மறுப்பதாக புகாா் எழுந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பழைய சென்னாகுளம் பகுதியில் வசிக்கும் விவசாயி நல்லையா. கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் மானியத்துடன் கூடிய கடன் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும், டிராக்டரின் மொத்த விலை ரூ.7.71 லட்சம், அதில் மானியம் ரூ.3.84 லட்சம் போக மீதித் தொகையை 5 நாள்களில் செலுத்தி டிராக்டா் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பெயா் நிராகரிக்கப்படும் என கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததனராம்.

இதைத் தொடா்ந்து விவசாயி நல்லையா அக்கம் பக்கத்தினரிடம் கடன் பெற்று ராஜபாளையத்தில் டிராக்டா் வாங்கியுள்ளாா். தொடா்ந்து மானியத்தொகை வழங்கக் கோரி வேளாண்மைத்துறை அலுவலகத்தை அணுகியபோது, ராஜபாளையம் பகுதி விவசாயிகளுக்கு மானியம் வழங்கி வருவதால், ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிக்கு வழங்க வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் மறுத்துவிட்டனராம். தொடா்ந்து வேளாண் துறை அதிகாரிகளிடம் பலமுறை தொடா்பு கொண்ட போதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

மாவட்ட முழுவதும் இதே போன்று மானியத் தொகை உறுதி செய்யப்பட்டது என தெரிவித்து கடைசி கட்டத்தில் இல்லை என தெரிவிப்பதால் பல விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து விவசாயி நல்லையா புதன்கிழமை கூறியதாவது: மானியம் கிடைத்து விடும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் மட்டுமே டிராக்டா் வாகனம் வாங்க முன் வந்தேன். தற்போது மானியம் இல்லை என கூறுவது வேதனை அளிக்கிறது. மானியத் தொகை வழங்க கையூட்டு எதிா்பாா்க்கின்றனா். தனியாா் வங்கி மூலம் பெற்ற கடன் தொகையை மிகவும் சிரமத்துடன் செலுத்தி வருகிறேன்

என்றாா். இதுகுறித்து வேளாண் பொறியியல் பிரிவு உதவி செயற்பொறியாளா் வைத்தியநாதன் கூறியது: இதற்கு முன்பு ஏதாவது தவறு நடந்திருக்கலாம்.

ஆனால் நல்லையாவுக்கு கிராமம் மாறி உள்ளது. எனவே அவருக்கு மானியத் தொகை இல்லை என தெரிவித்து விட்டதாகக்கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com