பந்தல்குடி ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே சேதுராஜபுரத்தை அடுத்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு அன்று மாலை நடைபெற்றது.
பந்தல்குடி அருகே ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாட்டையடுத்து அலங்காரத்தில் காட்சியளித்த அருள்மிகு ஸ்ரீசீரடி சாய்பாபா.
பந்தல்குடி அருகே ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாட்டையடுத்து அலங்காரத்தில் காட்சியளித்த அருள்மிகு ஸ்ரீசீரடி சாய்பாபா.

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே சேதுராஜபுரத்தை அடுத்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு அன்று மாலை நடைபெற்றது.

அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே சேதுராஜபுரத்தை அடுத்துள்ளது அருள்மிகு சீரடி சாய்பாபா கோவில் .தற்போதைய ஊரடங்கு தளர்வு விதிமுறைகளின்படி,வியாழக்கிழமை கோவிலின் வழிபாட்டில் குறைந்த அளவிலான பக்தர்களே,சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.இதன்படி ஆவணிமாத வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு அன்று மாலை நடைபெற்றது.அப்போது,முதலில் ஸ்ரீசீரடிசாய்பாபாவின் திருஉருவச்சிலையிலிருந்து முன்புறமாக உள்ள நந்தீஸ்வரர் சிலைவரைக்குமாக சிறப்பு மலரலங்காரங்கள் செய்யப்பட்டன.

அதையடுத்து,வழிபாட்டுப்பாடல்கள்,இசையுடன் ஒலிபெருக்கியில் முழங்கியபடி இருக்க, பாபாவிற்கு பக்திப்பாடலின் பொருளுக்கேற்றபடி சிறப்பு பஞ்சதீப ஆராதனையும்,ஏக தீப ஆராதனையும் மாறி, மாறி செய்யப்பட்டன.பின்னர் கோவில் ஊழியர்கள் ஸ்ரீசீரடிசாய்பாபாவிற்கு வெண்சாமரம் வீசியபடி இருக்க, சிறப்பு பிரசாத அர்ப்பணிப்பாகிய நைவேத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. வழிபாடு முடிந்ததும், முழு அலங்காரத்தில் ஸ்ரீசீரடிசாய்பாபா அருள்பாலித்தார். அப்போது, உலக நன்மை வேண்டி சிறப்புப் பிரார்த்தனையும் நடைபெற்றது. இப்பிரார்த்தனையில் பக்தர்களும் பங்கேற்று, தாங்கள் கொண்டுவந்த பழங்கள், இனிப்புகள், மலர்களை ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கு பக்தியுடன் படைத்து, 3 நிமிட மெüன தியானத்தில் ஈடுபட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு சங்கல்ப வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.வழிபாட்டையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com