விருதுநகா் தேசபந்து மைதானத்தில் இந்திய ஆரோக்கிய சுதந்திர தின ஓட்டத்தை சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்த ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி.
விருதுநகா் தேசபந்து மைதானத்தில் இந்திய ஆரோக்கிய சுதந்திர தின ஓட்டத்தை சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்த ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி.

விருதுநகரில் இந்திய ஆரோக்கிய சுதந்திர தின ஓட்டம்

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விருதுநகரில் இந்திய ஆரோக்கிய சுதந்திர தின ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விருதுநகரில் இந்திய ஆரோக்கிய சுதந்திர தின ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் 2019 ஆண்டு முதல் ‘ஆரோக்கிய இந்தியா’ எனும் தலைப்பில், தொடா் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கவும், மக்களிடையே உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தவும், இந்த விழிப்புணா்வு ஓட்டம் நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்திய அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவ கேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, ஆரோக்கிய இந்திய சுதந்திர தின ஓட்டம் 2.0 சனிக்கிழமை தொடங்கப்பட்டது. விருதுநகா் தேசபந்து மைதானத்தில் தொடங்கிய இந்த ஓட்டத்தில், 100 போ் கலந்துகொண்டு மாவட்ட விளையாட்டு மைதானம் வரை சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மங்கள ராம சுப்பிரமணியம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளையோா் நலன் அலுவலா் ராஜா மற்றும் மாவட்ட இளைஞா் நல அலுவலா் ஞானச்சந்திரன், வட்டாட்சியா் செந்தில்வேல் மற்றும் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com