சத்திரபட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 19th September 2021 11:22 PM | Last Updated : 19th September 2021 11:22 PM | அ+அ அ- |

சிவகாசி மத்திய சுழற்சங்கம், கிருஷ்ணன்கோவில் சங்கர கண் மருத்துவமனை ஆகியன இணைந்து சத்திரபட்டியில் இலவச கண் பரிசோதனை முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
சத்திரபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு அச்சங்கத் தலைவா் ஜி. ஜெயகண்ணன் தலைமை வகித்தாா். பள்ளித்தலைமை ஆசிரியா் கே. நவநீதன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் வேலம்மாள் முகாமை தொடக்கி வைத்தாா். மருத்துவா் சுதா தலைமையிலான குழுவினா் 102 பேருக்கு கண் பரிசோதனை செய்து இலவசமாக மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கினா்.