ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நக்சல் தடுப்புப் பிரிவு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நக்சல் தடுப்புப் பிரிவு சார்பில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நக்சல் தடுப்புப் பிரிவு சார்பில் நடைபெற்ற சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு முகாம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நக்சல் தடுப்புப் பிரிவு சார்பில் நடைபெற்ற சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு முகாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நக்சல் தடுப்புப் பிரிவு சார்பில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிறப்பு இலக்கு படை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அறிவுரையின் பேரில், விருதுநகர் மாவட்ட நக்சல் தடுப்பு அலுவல் பிரிவினர் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினருடன் இணைந்து சனிக்கிழமையன்று செண்பகத்தோப்பு பகவதி நகர் கிராமம் சென்று கிராம மக்களிடையே, பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தும், பிளாஸ்டிக் பொருட்களை இனி வரும் காலங்களில், பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கியும், வனம்சார்ந்த தொழிலுக்கு செல்லும் மக்கள்  வனப்பகுதிக்குள் செல்லும் போது யாரேனும் அன்னிய சந்தேக நபர்கள் மற்றும் புதிய நபர்கள் தென்பட்டால் காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. பின்னர்  செண்பகத்தோப்பு பேச்சியம்மன் கோயில் சுற்று வட்டாரங்களில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் வனவர்  மாசாணமுத்து நக்சல் பிரிவு சார்பு ஆய்வாளர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com