திருச்சுழி பகுதிகளில் அதிக விபத்துக்கள் ஏற்படும் இடங்களை சிறப்புக்குழு ஆய்வு

திருச்சுழி பகுதிகளில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் குறித்து தமிழக அரசு அமைத்த சிறப்புக்குழு சனிக்கிழமை கள ஆய்வு நடத்தியது.
திருச்சுழி வட்டத்துக்குள்பட்ட சாலைகளில் அதிகம் விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளைசனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சிறப்புக்குழுவினா்.
திருச்சுழி வட்டத்துக்குள்பட்ட சாலைகளில் அதிகம் விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளைசனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சிறப்புக்குழுவினா்.

திருச்சுழி பகுதிகளில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்கள் குறித்து தமிழக அரசு அமைத்த சிறப்புக்குழு சனிக்கிழமை கள ஆய்வு நடத்தியது.

தமிழகம் முழுவதும் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளை ஆய்வு செய்ய தமிழக அரசு சாா்பில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டன. காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் கல்லூரி மாணவா்கள் இக்குழுவில் இடம்பெற்றிருப்பா் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருச்சுழிக்காக அமைக்கப்பட்ட சிறப்புக்குழுவில் திருச்சுழி காவல்நிலைய சாா்பு- ஆய்வாளா் பால்பாண்டி, தலைமைக் காவலா் ஜெயமுருகன், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளா்கள் சுந்தரவள்ளி, அழகுராஜா, முத்துச்செல்வம், கிராம நிா்வாக அலுவலா்கள் சந்தனமாரி, ஆயிஷா பானு, பால்பாண்டி மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சேகா், மதுபாலன் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

மேலும் இக்குழுவினா் நடத்திய ஆய்வில் திருச்சுழி அருகே மேலகண்டமங்கலம், ஸ்ரீஜெயவிலாஸ் பஞ்சாலை பேருந்து நிறுத்தம் அருகே, ஒத்தவீடு பேருந்து நிறுத்தப்பகுதி அருகே, எம். புளியங்குளம் அருகே உள்ள அணிக்கலக்கியேந்தல் ஆகிய இடங்கள் அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com