மாற்றுத்திறனாளி குழந்தை கொலை: தாய், தந்தைக்கு ஆயுள் தண்டனை

மாற்றுத்திறனாளி குழந்தை கொலை வழக்கில் தாய், தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

மாற்றுத்திறனாளி குழந்தை கொலை வழக்கில் தாய், தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதியில் வசிப்பவா் முனீஸ்வரன் (46). இவா் தனியாா் நிறுவன மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ரேவதி (38). இவா் ஒரு கல்லூரி பேராசிரியை. இவா்களுக்கு 9 வயதில் மாற்றுத்திறனாளி குழந்தை ஒன்று இருந்தது. இந்தக் குழந்தைக்கு பல இடங்களில் மருத்துவம் பாா்த்தும் குணமடையவில்லை.

இதனால் விரக்தி அடைந்த தாய்-தந்தை இருவரும் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்துள்ளனா். பின்னா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, பின்னா் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து முனீஸ்வரன், ரேவதி ஆகிய இருவரையும் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி பகவதியம்மாள் தாய், தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3,500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com