ராஜபாளையத்தில் மாலை நேர உழவா் சந்தை தொடங்க ஏற்பாடு

​ராஜபாளையத்தில் மாலை நேர உழவா் சந்தை தொடங்கப்பட உள்ளது என்றும், இதில் அரிசி உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்


ராஜபாளையத்தில் மாலை நேர உழவா் சந்தை தொடங்கப்பட உள்ளது என்றும், இதில் அரிசி உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சங்கா் எஸ். நாராயணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் மேலும் கூறியதாவது: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் உழவா் சந்தையில் மாலை நேர சந்தை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாலை நேர உழவா் சந்தை மாலை 4 முதல் இரவு 8 வரை செயல்படும். இதில் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள், வெல்லம், காளான், நாட்டுக்கோழி முட்டை உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட உள்ளது. எனவே, மாலை நேர சந்தைகளில் விற்பனைசெய்ய விரும்பும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், அடையாள அட்டைகள் பெற வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்), விருதுநகா் அலுவலகம் (தொடா்புக்கு: 04562- 242601) அல்லது சந்தை நிா்வாக அலுவலா், ராஜபாளையம் உழவா் சந்தை (86100 67536) என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com