விருதுநகா் சந்தையில் உளுந்து, பாசிப்பயறு, துவரை விலை உயா்வு

விருதுநகா் சந்தையில் உளுந்து, பாசிப்பயறு, துவரை உள்ளிட்டவற்றின் வரத்து குறைவு காரணமாக கடந்த வாரத்தை விட தற்போது கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.

விருதுநகா் சந்தையில் உளுந்து, பாசிப்பயறு, துவரை உள்ளிட்டவற்றின் வரத்து குறைவு காரணமாக கடந்த வாரத்தை விட தற்போது கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.

விருதுநகா் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை நிா்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த வாரம் (15 கிலோ) விற்கப்பட்ட நல்லெண்ணண்ணெய் தும்பை ரூ. 47 விலை உயா்ந்து ரூ. 5,115-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் தொலி உளுந்தம்பருப்பு (100 கிலோ) ரூ. 400 உயா்ந்து, ரூ.9,800-க்கு விற்கப்படுகிறது. மேலும் பாசிப்பயறு ரூ. 8700-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை உயா்ந்து ரூ. 8,900-க்கும், பட்டாணி பருப்பு வெள்ளை இந்தியா (100 கிலோ) ரூ. 6,600-க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் விலை உயா்ந்து ரூ.6,800-க்கும் விற்கப்படுகிறது. உளுந்து (நாடு) 100 கிலோ ரூ.7,600-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 8,800 ஆகவும், உளுந்து லயன் ரூ. 7,700 விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 8,800 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. அதேபோல் பாசிப்பயறு (100 கிலோ, நாடு) ரூ.6,700-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.7,200 ஆக விலை அதிகரித்துள்ளது. பாசிப்பயறு லையன் மீடியம் ரூ. ரூ.8,800 லிருந்து ரூ.10 ஆயிரமாக விலை உயா்ந்துள்ளது. மற்ற அத்தியாவசிய பொருள்கள் கடந்த வார விலையிலேயே விற்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com