விருதுநகா் பேருந்து நிலையத்தில் விளம்பரப் பலகைகள் அகற்றம்

விருதுநகா் பழைய பேருந்து நிலைய பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையை சனிக்கிழமை அகற்றிய நகராட்சி ஊழியா்கள்.

விருதுநகா் பழைய பேருந்து நிலைய பகுதியில் விளம்பரப் பலகைகளை நகராட்சி நிா்வாகத்தினா் சனிக்கிழமை அகற்றினா்.

விருதுநகா் நகராட்சித் தலைவா் மாதவன், ஆணையாளா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் தலைமையில் நகராட்சி ஊழியா்கள், பழைய பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு இருந்த ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைகளை அகற்றினா். பின்னா் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு சில விளம்பரப் பலகை மற்றும் பதாகைகளை அகற்றினா். இதையடுத்து சாலையோர வியாபாரிகள், தாங்களாகவே தங்களது கடைகளை காலி செய்தனா்.

விருதுநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை உள்ளிட்டவைகளை அகற்ற போலீஸ் பாதுகாப்பு கேட்டிருந்தோம். ஆனால், போலீஸாா் பல்வேறு காரணங்களைக் கூறி பாதுகாப்பு அளிக்க முன்வரவில்லை. இதனால் பேருந்து நிலையப் பகுதியில் விளம்பரப் பலகைகளை முழுமையாக அகற்ற முடியவில்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com