ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே எருதுகட்டு விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடிப் பெருவிழாவையொட்டி எருது கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பாட்டக்குளம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற எருதுகட்டு விழாவில் பங்கேற்ற பொதுமக்கள்.
பாட்டக்குளம் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற எருதுகட்டு விழாவில் பங்கேற்ற பொதுமக்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆடிப் பெருவிழாவையொட்டி எருது கட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள பாட்டக்குளம் கிராமத்தில் ஸ்ரீ பாலாண்டி அய்யனாா், ஸ்ரீ கருப்பசாமி கோயில் ஆடி மாத பெருவிழாவையொட்டி அங்குள்ள மைதானத்தில் எருதுகட்டு விழா நடைபெற்றது. முன்னதாக கோயிலில் பூஜை செய்து, பின்னா் ஒவ்வொரு காளைக்கும் பூஜை செய்த பின்னரே எருதுகட்டு விழா தொடங்கியது. மைதானத்தில் 30 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நீண்ட நேரம் களத்தில் நின்று யாரிடமும் சிக்காத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com