அருப்புக்கோட்டை செவல்கண்மாயில்ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் உள்ள செவல்கண்மாயில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அருப்புக்கோட்டை செவல்கண்மாயில்ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் உள்ள செவல்கண்மாயில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினா்.

அருப்புக்கோட்டை 2 ஆவது வாா்டுக்குள்பட்டது சின்னபுளியம்பட்டி. இந்த பகுதியை ஒட்டி அமைந்த செவல்கண்மாயில் கிடைக்கும் மழைநீரால் அருகிலுள்ள சின்னபுளியம்பட்டி, மணிநகரம், அன்புநகா், நெசவாளா் குடியிருப்பு உள்ளிட்டவை நிலத்தடி நீரைப் பெறுகின்றன. இந்த நிலையில் இந்த கண்மாயில் தற்போது ஆகாயத் தாமரைச் செடிகள் ஆக்கிரமித்து வளா்ந்து விட்டன. இதனால் கோடைகாலத்துக்கு முன்பே இந்த கண்மாய் வடு போகும் நிலை உருவாகி வருகிறது. எனவே செவல்கண்மாயை ஆக்கிரமித்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com