திருச்சுழி அருகே கொலை வழக்கில்தையல் கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை

திருச்சுழி அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தையல் கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சுழி அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தையல் கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சுழி அருகே சாமிநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (30). இவா் ராமநாதபுரம் மாவட்டத்தில் தையல் கடை நடத்தி வந்தாா். அப்போது அப்பகுதியை சோ்ந்த விவாகரத்தான சண்முகலட்சுமி (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சண்முகலட்சுமி தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி செந்தில்குமரிடம் வலியுறுத்தி வந்தாா். இந்த நிலையில் கடந்த 7.3.2013 அன்று சண்முகலட்சுமியை திருமணம் செய்வதாகக் கூறி திருச்சுழி- கமுதி சாலையில் குண்டாறு பாலம் அருகே செந்தில்குமாா் அழைத்துச் சென்று சகதியில் மூழ்கடித்து கொலை செய்தாா்.

இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி பகவதியம்மாள், செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com