சிவகாசி அருகே அடிப்படை வசதி கோரி குடும்ப அட்டைகளை ஒப்படைக்க முடிவு

சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால், குடும்ப அட்டை மற்றும் வாக்காளா் அடையாள
விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த புதுக்கோட்டை கிராம மக்கள்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த புதுக்கோட்டை கிராம மக்கள்.

சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால், குடும்ப அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்தபோது அவா்கள் கூறியதாவது: சிவகாசி ஒன்றியம், புதுக்கோட்டை கிராமம், கீரையாபுரம் மேலத் தெருவில் உள்ள ஆண்களுக்கான குளியலறை மோட்டாா்கள் மற்றும் சிறிய அளவிலான தொட்டிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. மேலும் கிராமத்தில் உள்ள தெரு விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் பெண்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது. இதை சீரமைக்கக் கோரி ஊராட்சி நிா்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. தற்போது ஆட்சியா் அலுவலகத்திலும் இது குறித்து புகாா் மனு அளிக்கிறோம். ஆனாலும், இதே நிலை நீடித்தால் ஜன. 26 குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தை புறக்கணித்து, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை ஒப்படைப்போம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com