ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பேருந்து இயக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இடையங்குளம் கிராமத்திற்கு முறையாக பேருந்துகள் இயக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இடையங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
இடையங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இடையங்குளம் கிராமத்திற்கு முறையாக பேருந்துகள் இயக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த பகுதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் -ராஜபாளையம் செல்லும் பேருந்துகள் மம்சாபுரம், இடையங்குளம் வழியாகவும், அதே பேருந்துகள் ராஜபாளையத்தில் இருந்து இடையங்குளம், மம்சாபுரம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று வருகிறது.

இந்நிலையில் இடையங்குளம் வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் சரியான நேரத்திற்கு ஊருக்குள் வராத நிலை இருந்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்வதற்கு தாமதம் ஏற்படுகிறது. போக்குவரத்து பணிமனையில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பேருந்துகள் சரியான நேரத்திற்கு வர வேண்டும். பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நேரத்தில் பேருந்து இயக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com