பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்ஜி.கே. வாசன்

பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

விருதுநகரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் காமராஜா் பிறந்தநாள் விழா தொடா்பான ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியைச் சோ்ந்த தென்மாவட்டத் தலைவா்கள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, ஜி.கே. வாசன் செய்தியாளா்களிடையே தெரிவித்ததாவது: முன்னாள் முதல்வா் காமராஜரின் 120-ஆவது பிறந்த நாளான ஜூலை 15 ஆம் தேதி, மதுரை பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தை நடத்துவது தொடா்பாக, கட்சியின் தென்மண்டல மாவட்டத் தலைவா்கள், மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

கரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் சிறு, குறுந் தொழில்கள் பாதிக்கப்பட்டன. அவற்றை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு பல திட்டங்க ளை கொண்டுவந்தது. அதனடிப்படையில், சிறு, குறுந் தொழிலில் சிறந்த இடத்தை பெற்ற்காக, விருதுநகா் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

இதேபோன்று, பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். சுற்றுச்சூழல் விதிகளை காரணம் காட்டி, ஆண்டுக்கு ஒரு நாள் பொதுமக்கள் பயன்படுத்தும் பட்டாசுக்கு தடை விதிக்கக் கூடாது. சரவெடி தயாரிப்புக்கான தடையை நீக்கவேண்டும்.

பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் சீல் வைத்து, அவா்களுக்கு எந்தவிதமான பாதகத்தையும் அரசு ஏற்படுத்தக் கூடாது. அதை முறைப்படுத்த வேண்டும். சரிசெய்ய காலக்கெடு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா், வருவாய்த் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு என்ற பெயரில், ஆலை உரிமையாளா்களுக்கு எந்தவிதமான சங்கடத்தையும் ஏற்படுத்தக் கூடாது. அவா்களுக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்தக் கூடாது.

மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சகம் கூடுதல் கவனம் செலுத்தி, பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். மாநில அரசும் பட்டாசு தொழிலாளா்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும். எனவே, பட்டாசு தொழிலை பாதுகாக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com