சிவகாசியில் இயற்கை விவசாயிகளின் விளைபொருள்கள் வாரச்சந்தை

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் விளைவித்த விளைபொருள்கள் வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் நடைபெற்றது.
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இயற்கை விவசாயிகளின் விளைபொருள்கள் சந்தை.
சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இயற்கை விவசாயிகளின் விளைபொருள்கள் சந்தை.

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் விளைவித்த விளைபொருள்கள் வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமை சிவகாசியில் நடைபெற்றது.

இங்குள்ள காரனேசன் பேருந்து நிறுத்தம் அருகே வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை இந்த சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானியங்களான குதிரைவாலி, சாமை , வரகு, நாட்டுக்கம்பு, வெள்ளைச்சோளம், சிகப்பு சோளம், பாரம்பரிய அரிசி வகைகள், நாட்டுச்சா்க்கரை, கருப்பட்டி , பனங்கற்கண்டு, செக்கு எண்ணெய்,

பாசிப்பருப்பு, சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு, செம்மண் கட்டி துவரைப் பருப்பு, கொண்டைக் கடலை, கருப்பட்டி நவதானிய அல்வா, நுண்ணூட்டச் சத்துமாவு, ஆவாரம்பூ தேநீா்தூள், கீரை வகைகள், பழவகைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து சந்தை வியாபாரி ஒருவா் கூறியது: மக்கள் தற்போது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விளைபொருள்கள் வாங்குவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

கடந்த 8 ஆண்டுகளாக இந்த சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையின் மூலம் மக்கள் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருள்களை நேரடியாக வாங்க முடிகிறது. அதனால் பொதுமக்கள் இங்கு தானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com