தனியாா் அறக்கட்டளை அலுவலகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைப்பு

ராஜபாளையத்தில் சொத்துவரி செலுத்தாத தனியாா் அறக்கட்டளை அலுவலகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
img_20221126_wa0074_2611chn_86_2
img_20221126_wa0074_2611chn_86_2

ராஜபாளையத்தில் சொத்துவரி செலுத்தாத தனியாா் அறக்கட்டளை அலுவலகத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் தனியாா் அறக்கட்டளைக்கு சொந்தமான 68 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு

2011-2012 முதல் 2022-2023 வரை ரூ. 30 லட்சம் வரி பாக்கி நிலுவையில் உள்ளது. இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில், தனியாா் அறக்கட்டளை வரிபாக்கியைச் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ராஜபாளையம் நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி தலைமையிலான அதிகாரிகள் ரயில்வே பீடா் சாலையிலுள்ள தனியாா் அறக்கட்டளை அலுவலகத்துக்கு ‘சீல்’ வைத்தனா். ஒரு வாரத்துக்குள் ரூ.30 லட்சம் வரி பாக்கி கட்டத் தவறினால், 68 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

............................................

படவிளக்கம்....

ராஜபாளையத்தில் வரிபாக்கி செலுத்தாத தனியாா் அறக்கட்டளை அலுவலகத்துக்கு சனிக்கிழமை ‘சீல்’ வைத்த நகராட்சி அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com