பொது இடங்களில் பீடி, சிகரெட் விற்ற 18 கடைகளுக்கு அபராதம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பொது இடங்களில் பீடி, சிகரெட், புகையிலை விற்ற 18 கடைகளின் உரிமையாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை, பீடி, சிகரெட் மற்றும் நெகிழிப் பைகள்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் கல்வி நிலையங்கள், ஆண்டாள் கோயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, புகையிலை, பீடி, சிகரெட் விற்பனை செய்த 18 கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனா். மேலும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள 15 கிலோ நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்து அழித்தனா். ரெட்டியபட்டி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜெயச்சந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ரமேஷ், நரேன், சூா்யா, கணேஷ் ஆகியோா் இந்த சோதனையில் ஈடுபட்டனா்.

Image Caption

~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com