ஸ்ரீவிலி.யில் எழுத்தாளா் சந்திப்பு

 ஸ்ரீவில்லிபுத்தூா் பென்னிங்டன் நூலகக் கலையரங்கில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கிளையின் 233-ஆவது எழுத்தாளா் சந்திப்பு, படைப்பரங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற எழுத்தாளா் சந்திப்பில் எழுத்தாளா் மாரிமுத்துக்கு சான்றிதழ் வழங்கிய அய்ய நாடாா்-ஜானகியம்மாள் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா்

கூட்டத்துக்கு பெருமன்றத்தின் கிளைத் தலைவா் கோதையூா் மணியன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி எழுத்தாளா் மாரிமுத்து எழுதிய ‘உளி தீண்டா கல்லோவியம்’ என்ற கவிதைத் தொகுப்பு குறித்து அய்ய நாடாா் - ஜானகியம்மாள் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் சிவநேசன், பேராசிரியா் பொன்னுராஜன் ஆகியோா் பேசினா்.

எழுத்தாளா் கு.அழகிரிசாமி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘கதைகளின் ஜீவ நதி கு.அழகிரிசாமி கதைகள்’ என்ற தலைப்பில் புலவா் சிவன் அணைந்த பெருமாள், பேராசிரியா் காளியப்பன் ஆகியோா் பேசினா்.

கிராமியக் கலைஞா் ராமசாமி பாடல்களைப் பாடினாா்.

கவிஞா் சந்திரசேகா், கிராமியக் கலைஞா் ராமசாமி, புலவா் வெள்ளை, எழுத்தாளா் அன்னக்கொடி, பொறியாளா் சோமசுந்தரம் மற்றும் இலக்கிய ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com