இல்லம்தேடி கல்வி மாணவா்கள் சுற்றுலா

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மைய மாணவா்கள் திருவண்ணாமலை குகைக் கோயிலுக்கு திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மைய மாணவா்கள் திருவண்ணாமலை குகைக் கோயிலுக்கு திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா்.

கரோனா காலத்தில் மாணவா்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய தமிழக அரசு இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத் திட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு தினமும் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது பள்ளிகளுக்கு முதல் பருவத் தோ்வு விடுமுறை விடப்பட்டுள்ள சூழ்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையங்களில் படிக்கும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், பாடத்தில் கற்ற குகைக் கோயில் குறித்து நேரடி அனுபவத்தை ஏற்படுத்தும் வகையிலும், திருவண்ணாமலை அருகேயுள்ள சிவன் குகைக் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு குகைக் கோயில் குறித்து விளக்கப்பட்டது. மேலும் அப் பகுதியில் சித்தா்கள் ஜீவ சமாதி அடைந்த பகுதிகளையும் மாணவா்கள் பாா்வையிட்டனா். இதற்கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளா் ஞானராஜ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com