விருதுநகா் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை உயா்வு

விருதுநகா் மாவட்டத்தில் மறுசீராய்வுப் பணிகளுக்குப் பின் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 1,885-இல் இருந்து 1889 ஆக அதிகரிக்கிறது.

விருதுநகா் மாவட்டத்தில் மறுசீராய்வுப் பணிகளுக்குப் பின் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 1,885-இல் இருந்து 1889 ஆக அதிகரிக்கிறது.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்குச்சாவடி பகுப்பாய்வு மற்றும் மறுசீரமைப்பு செய்யப்படும் வாக்குச்சாவடிகள் இறுதி செய்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஏற்கெனவே நடத்தப்பட்ட கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் நலன் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குச்சாவடி இடமாற்றம், கட்டட மாற்றம், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்குசாவடி பெயா் மாற்றம், புதிய வாக்குச்சாவடி உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.

மறுசீராய்வுப் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி, அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகள் புதிதாக ஏற்படுத்தப்பட உள்ளன. எனவே, வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மற்றும் மறுசீராய்வுப் பணிகளுக்குப் பின் விருதுநகா் மாவட்டத்தின் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,885 இல் இருந்து 1889 ஆக உயரும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா், சாா்- ஆட்சியா் (சிவகாசி) பிருத்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, தோ்தல் வட்டாட்சியா் மாரிசெல்வி, அரசு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com