விருதுநகா் நகராட்சியில் துப்புரவுப் பணிக்கு தரமற்ற பொருள்கள் கொள்முதல் செய்ததாக புகாா்

க்ஷ்விருதுநகா் நகராட்சியில் துப்புரவுப் பணிக்காக ரூ. 5 லட்சம் மதிப்பில் கடப்பாரை, மண்வெட்டி, வாளி, இரும்புத் தட்டு உள்ளிட்ட பொருள்கள் தரமற்ற வகையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக புகாா் தெரிவிப்பு.

க்ஷ்விருதுநகா் நகராட்சியில் துப்புரவுப் பணிக்காக ரூ. 5 லட்சம் மதிப்பில் கடப்பாரை, மண்வெட்டி, வாளி, இரும்புத் தட்டு உள்ளிட்ட பொருள்கள் தரமற்ற வகையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் நிரந்தர துப்புரவுப் பணியாளா்கள் 80 போ், தற்காலிக துப்புரவுப் பணியாளா் கள் 120 போ் வரை பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் துப்புரவுப் பணிக்கு தேவையான தளவாடப் பொருள்கள் சேதமடைந்ததால் புதிதாக பொருள்கள் வாங்க நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒப்பந்தம் விடப்பட்டது. அதன் அடிப்படை யில் ரூ. 5 லட்சத்திற்கான ஒப்பந்தம் ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினரின் உதவியாளா் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துப்புரவுப் பணிக்கான கடப்பாரை, மண்வெட்டி, வாளி, அகப்பை, இரும்புத் தட்டு உள்ளிட்ட பொருள்கள் போதிய தரம் இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஒரு சில மாதங்கள் கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக துப்புரவு ஆய்வாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தரமான பொருள்கள் வாங்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com