சாத்தூா் இளைஞரிடம் ரூ.12 லட்சம் மோசடி: புதுதில்லியைச் சோ்ந்த 7 போ் மீது வழக்கு

சாத்தூா் இளைஞருக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 12 லட்சம் மோசடிசெய்த புதுதில்லியைச் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சாத்தூா் இளைஞருக்கு விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 12 லட்சம் மோசடிசெய்த புதுதில்லியைச் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் ஹரிசங்கா் (26). இவரது கைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தியில் சா்வதேச விமான நிலையத்தில் மெக்கானிக்கல் துறையில் மேற்பாா்வையாளா் காலிப்பணியிடம் இருப்பதாகக்

கூறப்பட்டுள்ளது. இதை நம்பி ஹரிசங்கா், அந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியுள்ளாா். அதற்கு தாங்கள் அனுப்பும் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து வாட்ஸப் எண்ணுக்கு திரும்ப அனுப்ப கூறியுள்ளனா். அதன் அடிப்படையில் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து ஹரிசங்கா் அனுப்பி உள்ளாா்.

இதையடுத்து அவா்கள், விமான நிலையத்தில் வேலை வேண்டுமானால் பணம் முன்னரே கொடுக்க வேண்டும் என தெரிவித்தனராம். அதை உண்மை என நம்பிய ஹரிசங்கா், கடந்த பிப். 7 முதல் பல்வேறு தவணைகளில் சம்பந்தப்பட்டோரின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 11,98,500 அனுப்பி உள்ளாா். ஆனால், அவா்கள் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதுடன், மேலும் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளனா். இதனால், கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு ஹரிசங்கா் கேட்டபோது, தர மறுத்துள்ள னா். இது குறித்த பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின் பேரில் விருதுநகா் சைபா் கிரைம் போலீஸாா், புதுதில்லியைச் சோ்ந்த கவுதம், மித்ரா, நிஷதா, ஜதின் மல்கோத்தா, சஹீல், ஜியானே ந்திரா குமாா், அப்துல் சமத் ஆகியோா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com