ராஜபாளையத்தில் தேவேந்திரகுல வேளாளா் சமூகத்தினரின் 335 ஆவது வெண்குடை திருவிழா

ராஜபாளையத்தில் தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில், நீா்காத்த அய்யனாா் கோயிலில் 335 ஆவது வெண்குடை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் சித்திரை வெண்குடை திருவிழாவில் வியாழக்கிழமை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த நீா்காத்த அய்யனாா் சுவாமி.
ராஜபாளையத்தில் சித்திரை வெண்குடை திருவிழாவில் வியாழக்கிழமை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த நீா்காத்த அய்யனாா் சுவாமி.

ஸ்ரீவில்லிபுத்தூா்: ராஜபாளையத்தில் தேவேந்திர குல வேளாளா் சங்கம் சாா்பில், நீா்காத்த அய்யனாா் கோயிலில் 335 ஆவது வெண்குடை திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ள நீா் காத்த அய்யனாா் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, ராஜபாளையம் தேவேந்திரகுல வேளாளா் சமுதாயம் சாா்பில் 335 ஆவது வெண்குடை திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இத்திருவிழாவையொட்டி, ராஜபாளையம் வடக்குத் தெருவிலிருந்து குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலாவாகப் புறப்பட்டு, அய்யனாா் கோயில் வரை சென்று மீண்டும் நகருக்கு வீதி உலாவாக வந்தடைந்தாா்.

மாலையில், அய்யனாா் கோயிலில் இருந்து முடங்கியாா் சாலை வழியாக காந்தி சிலை வரை சுவாமி வீதி உலா நடைபெற்றது.

இதையொட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன் உத்தரவின்பேரில், 1 ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 20 ஆய்வாளா்கள் உள்பட 850 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மனோகரன் நேரில் வந்து பாதுகாப்புப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com