ராஜபாளையத்தில் துப்புரவுப் பணியாளா்கள்வேலை நிறுத்தப் போராட்டம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுப் பணியாளா்கள்.
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுப் பணியாளா்கள்.

ராஜபாளையம்,: ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜபாளையத்தில் 2 அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஒன்று மகப்பேறு மருத்துவமனை, மற்றொன்று பி.ஏ.சி.ஆா். பொது மருத்துவமனை. இங்கு தனியாா் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தப் பணியாளா்களாக துப்புரவு மற்றும் பாதுகாப்புப் பணியில் 50-க்கும் மேற்பட்டோா் பணியாற்றுகின்றனா்.

இவா்களுக்கு ரூ. 8 ஆயிரம் ஊதிய ஒப்பந்தம் போட்டு விட்டு, கடந்த 5 ஆண்டுகளாக ரூ. 4 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டதாம். தற்போது இந்த தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்து மற்றொரு தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றுள்ளது. இந்த நிறுவனமும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவா்களுக்கு இதே சம்பளத்தை வழங்குவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் 30-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்கள் வேலைக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினரும் மகப்பேறு மருத்துவமனை வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் நோயாளிகளின் நிலையை கவனத்தில் கொண்டு 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்பு பணிக்கு திரும்பினா். உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தையும், சம்பளத்தை உயா்வையும் வழங்க வேண்டுமென அரசுக்கு அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com