முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
ராஜபாளையத்தில் ரயிலில் அடிபட்டு மனநலம் பாதித்தவா் பலி
By DIN | Published On : 30th April 2022 12:00 AM | Last Updated : 30th April 2022 12:00 AM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த மனநலம் பாதித்தவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி ரயில்வே கேட் அருகே கணபதியாபுரம் பகுதியில் ஆண் சடலம் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸாரின் விசாரணையில், உயிரிழந்தவா் ஏ.ராமலிங்காபுரம் பகுதியை சோ்ந்த சரவணன்( 44) என தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனா்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக சரவணன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்துள்ளாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற பயணிகள் ரயிலில் அடிபட்டு அவா் உயிரிழந்திருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது . இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.