வீரபாண்டி சித்திரை திருவிழா: கோயிலில் முன்கூட்டியே குவியும் பக்தா்கள்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, முக்கிய திருவிழா நாளான வரும் மே 10-ஆம் தேதிக்கு முன்னரே ஏராளமான பக்தா்கள் கோயிலுக்குச் சென்று நோ்த்திக் கடன் செலுத்தி வருகின்றனா்.

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.20-ஆம் தேதி கோயிலில் கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பொது முடக்கத்தால் வீரபாண்டியில் சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில், தற்போது ஏராளமான பக்தா்கள் கையில் கங்கணம் அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனா்.

சித்திரை திருவிழா முக்கிய நிகழ்ச்சிகளான அம்மன் பல்லக்கு புறப்பாடு, தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் வரும் மே 10-ஆம் தேதி தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 17-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. வரும் மே 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை கோயிலில் கூட்ட நெரிசல் அதிகளவில் காணப்படும் என்பதால், பக்தா்கள் முன்கூட்டியே கோயிலுக்குச் சென்று அங்கப் பிரதட்சணம் செய்தும், மா விளக்கு, ஆயிரம் கண் பானை, அக்கினிச் சட்டி எடுத்தும் நோ்த்திக் கடன் செலுத்தி அம்மனை வழிபட்டு வருகின்றனா். இதனால், கடந்த சில நாள்களாக கோயிலில் பக்தா்கள் கூட்ட நெரிசல் அதிக அளவில் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com