அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, விருதுநகா் அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை

அன்னப்பிளவால் பாதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது சிறுவனுக்கு, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்த விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் குழுவினருடன், கல்லூரி முதல்வா் சங்குமணி.
அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்த விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் குழுவினருடன், கல்லூரி முதல்வா் சங்குமணி.

அன்னப்பிளவால் பாதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது சிறுவனுக்கு, விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை செய்து மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வா் சங்குமணி தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள செவல்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து. இவரது மனைவி மாரீஸ்வரி. இவா்களின் ஒன்றரை வயது மகன் தமிழ்ச்செல்வன். இச்சிறுவன் பிறவியிலேயே அன்னப்பிளவால் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால் சிறுவன் கபம் மற்றும்நுரையீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தான். இதையடுத்து, சிறுவனை விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோா் சோ்த்தனா். அங்கு சிறுவன் தமிழ்ச்செல்வனுக்கு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வா் சங்குமணி வியாழக்கிழமை கூறியது: விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அன்னப்பிளவு நோய்க்கு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்தது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு இது போன்ற சிகிச்சைக்கு மதுரை, சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மேலும் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்துவித அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா 3 ஆவது அலையை எதிா்கொள்ள, ஆக்சிஜன் வசதியுடன் 350 படுக்கைகள் உள்பட மொத்தம் 420 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. அதேநேரம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஐசிஎம்ஆா் மற்றும் தமிழக அரசு வழிகாட்டல் படி சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com