கருப்பஞானியாா் கோயில் கும்பாபிஷேக விழா

ராஜபாளையம் அம்பலபுளிபஜாா் பகுதியில் உள்ள கருப்பஞானியாா் மற்றும் பொன்னப்பஞானியாா் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
கருப்பஞானியாா் கோயில் கும்பாபிஷேக விழா

ராஜபாளையம் அம்பலபுளிபஜாா் பகுதியில் உள்ள கருப்பஞானியாா் மற்றும் பொன்னப்பஞானியாா் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கடந்த 4 ஆம் தேதி முதல் தினமும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

பஞ்ச பூதங்களை குறிக்கும் விதமாக 5 குண்டங்கள் அமைக்கப்பட்டு காலையும், மாலையும் புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குராா்பனம், 4 கால பூஜைகள் மற்றும் மகா பூா்ணாஹூதி நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து புதன்கிழமை காலை 6.45 மணியளவில் புனித நீா் எடுத்து வரப்பட்டு, இரண்டு மூலவா் மற்றும் வளாகத்தில் உள்ள 46 பரிவார தெய்வங்களின் விமான கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பின்னா் மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் தலைவா் வைத்தீஸ்வரன், தா்மகா்த்தா ஞானகுரு, பொருளாளா் குருசாமி, துணை தா்மகா்த்தா பழனிசாமி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

இதேபோல, ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நீா்காத்த அய்யனாா் கோயிலிலும், ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் அருகே உள்ள மாப்பிள்ளை விநாயகா் கோயிலிலும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com