சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா: அம்மன் வீதி உலா

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, அம்மன் வீதி உலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, அம்மன் வீதி உலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலில் மே 3 ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. இதையொட்டி, தினசரி இரவு உபயதாரா்கள் மூலம் அம்மன் வீதி உலா நடைபெறும்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சிவகாசி காளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிறுவனத்தாரின் மண்டகப்படி நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடா்ந்து அம்மன் கைலாச பா்வத வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. ஊா்வலத்தின் மூன்பு வாணவேடிக்கை நடைபெற்றது.

கேரள செண்டை மேளத்துடன், பிரம்மாண்ட விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை காளீஸ்வரி பயா் ஒா்கஸ் நிா்வாக இயக்குநா் ஏ.பி. செல்வராஜன் செய்திருந்தாா்.

விழாவையொட்டி, சென்னை லட்சுமணன் ஸ்ருதி இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com