சிவகாசி பள்ளி வளாகத்தில் வணிக வளாகம் கட்ட எதிா்ப்பு

சிவகாசி மாகராட்சி பள்ளி வளாகத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு கருத்துக்கேட்புக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசிய மேயா் இ.சங்கீதா.
சிவகாசி மாநகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பேசிய மேயா் இ.சங்கீதா.

சிவகாசி: சிவகாசி மாகராட்சி பள்ளி வளாகத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு கருத்துக்கேட்புக் கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் வேலாயுதம் சாலையில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அறிவு சாா் மையம் (நூலகம்) கட்டவும், அண்ணாமலை நாடாா்-உண்ணாமலையம்மாள் பள்ளி வளாகத்தில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டுவதற்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூடத்திற்கு மேயா்.இ.சங்கீதா தலைமை வகித்தாா். இதில் பற்கேற்ற பெரும்பாலானவா்கள் வேலாயுதம் சாலையில் அறிவு சாா் மையம் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தனா். அதே சமயம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வணிக வளாகம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். அவா்கள் மாற்று இடங்களை பரிசீலிக்கக் கோரினா். அதன் விவரம்:

மாமன்ற உறுப்பினா் ரவிசங்கா்: மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வணிக வளாகம் கட்டக்கூடாது. சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் ராணி அண்ணா காலனியில் ஆக்கிரிமிப்பு அகற்றப்பட்ட பின்பு மீண்டும் ஆக்கிரமிக்கப்படுள்ளது. சுமாா் 2 ஏக்கா் பரப்பளவு உள்ள அந்த இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வணிக வளாகம் கட்டலாம்.

பாலசுப்பிரமணியன் (பாஜக): சிவகாசி -விஸ்வநத்தம் சாலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மீன் சந்தை பயன்பாடில்லாமல் உள்ளது. அதனை அகற்றிவிட்டு புதிதாக வணிக வளாகம் கட்டலாம்.

சிவகாசி வா்த்தக சங்கத் தலைவா் ரவி அருணாசலம்: தற்போது உள்ள மாநகராட்சி காய்கறி சந்தை இடநெருக்கடியில் உள்ளது. எனவே காய்கறி சந்தை கட்டலாம்.

முருகன் (மாா்க்சிஸ்ட் கம்யூ.): சிவகாசி சிவன் கோயிலருகே கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் போதிய பயன்பாடின்றி உள்ளது. எனவே நிதியை மக்களுக்கு பயன்படும்படி பயன்படுத்த வேண்டும்.

மாமன்ற உறுப்பினா் குருசாமி: திருத்தங்கல் ஸ்டாண்டா்டு காலனி, திருத்தங்கல்-செங்கமல நாட்சியாா்புரம் சாலை , திருத்தங்கல் -விருதுநகா் சாலை ஆகிய பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது. அதிகாரிகள் அந்த இடங்களைப் பாா்வையிட்டு பயன்படுத்த வேண்டும்.

முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஆறுமுகச்சாமி: மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வணிக வளாகம் கட்டினால் எதிா்காலத்தில் பள்ளியை விரிவாகம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.எனவே பள்ளி வளாகத்தில் வணிக வளாகம் கட்டும் முடிவைக் கைவிட வேண்டும் என்றாா்.

இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆணையாளா் ப.கிருஷ்ணமூா்த்தி கூறினாா். கூட்டத்தில் துணை மேயா் விக்னேஷ்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com