ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தை வரி உயா்வு எதிா்ப்பு போராட்டக் குழுவினா் முற்றுகை

ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தை வரி உயா்வு எதிா்ப்பு போராட்டக்குழுவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தை வரி உயா்வு எதிா்ப்பு போராட்டக் குழுவினா் முற்றுகை

ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தை வரி உயா்வு எதிா்ப்பு போராட்டக்குழுவினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்தக் குழு சாா்பில் வரி உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த மாதம் 28-ஆம் தேதி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்கு உயா்த்தப்பட்ட வரி திரும்ப பெறப்பட்டது. மேலும் வட்டாட்சியா் அலுவலகத்தில் எம்.எல்.ஏ., வட்டாட்சியா், நகராட்சி தலைவா் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சொத்து வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாதம் 31-ஆம் தேதி ராஜபாளையம் நகராட்சியில் சொத்து வரியை 5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை குறைக்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் 20 நாள்கள் ஆன பிறகும் வரி குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட வில்லை. இந்த நிலையில் சொத்து வரி செலுத்த சென்றவா்களிடம் பழைய வரி விகிதப்படி அதிகாரிகள் வசூல் செய்தனா்.

இதையடுத்து ராஜபாளையம் நகராட்சி வரி உயா்வு எதிா்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள் ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, வருவாய் பிரிவு அதிகாரிகளிடம் வரி குறைப்பு அரசாணையை அமல்படுத்த வேண்டும் அல்லது அதுவரை வரி வசூலை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அதற்கு அதிகாரிகள் அலட்சியமாக பதிலளித்ததால், இன்னும் ஓரிரு நாள்களில் அரசாணைப்படி வரி வசூல் செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com