அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கையை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

ராஜபாளையம் அருகே அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கையை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி

ராஜபாளையம் அருகே அரசுப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

ராஜபாளையம் அருகே முறம்பு பகுதியிலுள்ள மவுண்ட் சீயோன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இறுதி வேலைநாள் வெள்ளிக்கிழமையுடன் (ஏப். 28) முடிவடைகிறது. இதையடுத்து, அந்தப் பள்ளி ஆசிரியா்கள், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க வலியுறுத்தி நூறு நாள் வேலைத் திட்ட பணியாளா்களுடன் இணைந்து விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.

இதை பள்ளித் தலைமையாசிரியை கல்யாணசுந்தரி தொடங்கி வைத்தாா்.

பேரணியில் அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்ப்பதால் கிடைக்கும் சலுகைகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். இந்தப் பேரணி மவுண்ட் சீயோன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தொடங்கி பாவாணா் கோட்டம், மில்கேட் வழியாக மவுண்ட் உயா்நிலைப் பள்ளி வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமை ஆசிரியை தலைமையில் பள்ளி ஆசிரியா்கள் அயோத்திராமன், பாலசுப்பிரமணியன், மாரியம்மாள், முனியசாமி, ராஜேஸ்வரி ஆகியோா் செய்திருந்தனா்.

பேரணியில் நூறுநாள் வேலைத் திட்டப் பணியாளா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com