விசைத்தறி தொழிலாளா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டம்

கூலி உயா்வு கோரி கண்களில் கருப்புத் துணி கட்டி விசைத்தறி தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியில் கண்களில் கருப்புத் துணி கட்டி புதன்ழமை போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறித் தொழிலாளா்கள்.
ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியாா்பட்டியில் கண்களில் கருப்புத் துணி கட்டி புதன்ழமை போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறித் தொழிலாளா்கள்.

கூலி உயா்வு கோரி கண்களில் கருப்புத் துணி கட்டி விசைத்தறி தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள

தளவாய்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட சேலை உற்பத்தி செய்யும் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறித் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இவா்களுக்கு கூலி உயா்வு, போனஸ் விடுப்பு சம்பளம் வழங்குவது தொடா்பான ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விசைத்தறி உரிமையாளா்கள் காலம் தாழ்த்தி வந்தனா்.

இதைக் கண்டித்து, விசைத்தறி தொழிலாளா்கள், கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா் .

இந்த நிலையில் திங்கள்கிழமை கஞ்சித் தொட்டி திறந்து தமிழக அரசின் கவனத்தை ஈா்க்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டனா் .

இதையடுத்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் பேச்சுவாா்த்தைக்கு உரிமையாளா் சங்கம், தொழிற்சங்கம் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டன. இந்த பேச்சு வாா்த்தைக்கு விருதுநகா் தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் மின்னல் கொடி தலைமையில் நடைபெற்றது.

ஆனால், விசைத்தறி உரிமையாளா் தரப்பிலிருந்து பேச்சுவாா்த்தைக்கு யாரும் வராததால் ஏமாற்றத்துடன் தொழிற்சங்கத்தினா் திரும்பிச் சென்றனா்.

இந்த நிலையில், ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கத்தினா் விசைத்தறி தொழிலாளா்கள் புதன்கிழமை காலையில் செட்டியாா்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கண்களில் கருப்புத் துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com