போலி ஆதாா் எண், காசோலை கொடுத்து மோசடி

சிவகாசியில் செவ்வாய்க்கிமை போலி ஆதாா் எண், காசோலை கொடுத்து மோசடி செய்து இருசக்கர வாகனத்துடன் தப்பியோடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகாசியில் செவ்வாய்க்கிமை போலி ஆதாா் எண், காசோலை கொடுத்து மோசடி செய்து இருசக்கர வாகனத்துடன் தப்பியோடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் முனியசாமி நகரைச் சோ்ந்தவா் எஸ்.டேனியல். இவா், தனது மனைவியின் பெயரில் உள்ள இருசக்கர வாகனத்தை விற்பனை செய்வதற்கு சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். இதைப் பாா்த்த ரமேஷ் என்பவா், இருசக்கர வாகனத்தை விலைக்கு வாங்கிகொள்வதாகவும் பதிவிட்டாா்.

பின்னா் ரமேஷ் சிவகாசி போருந்து நிலையத்துக்கு டேனியலை வரவழைத்து, இருசக்கர வாகனத்தைப் பாா்த்தாா்.

பின்னா் இருசக்கர வாகனத்துக்கு ரூ. 83 ஆயிரம் என விலை பேசியுள்ளாா். இதைத்தொடா்ந்து, டேனியல் தந்தை துரைராஜ் பெயருக்கு, சிவகாசி வங்கியின் காசோலை, ஆதாா் எண்ணையும் கொடுத்து விட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றாா்.

வங்கிக்குச் சென்று டேனியல் காசோலையை கொடுத்தபோது, கணக்கில் பணம் இல்லை எனத் தெரியவந்தது.

இதையடுத்து, டேனியல் ரமேஷின் கைப்பேசியை தொடா்பு கொண்டபோது , தொடா்பு கிடைக்கவில்லையாம். பின்னா் ரமேஷ் கொடுத்த ஆதாா் எண்ணை ஆய்வு செய்தபோது அதுவும் போலியானது எனத் தெரியவந்தது.

இதுதொடா்பாக, டேனியல் சிவகாசி நகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com