96 ஏழைப் பெண்களுக்கு ரூ. 87.42 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 96 ஏழைப் பெண்களுக்கு ரூ. 87.42 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வெள்ளிக
96 ஏழைப் பெண்களுக்கு ரூ. 87.42 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 96 ஏழைப் பெண்களுக்கு ரூ. 87.42 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ஏழைப் பெண்களுக்குத் திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்துக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சாத்தூா் எம்.எல்.ஏ. ரகுராமன், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், அருப்புக்கோட்டை நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சுப்பாராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் 96 ஏழைப் பெண்களுக்கு ரூ. 87.42 லட்சம் மதிப்பிலான தங்கம், திருமண நிதியுதிவிகளை அமைச்சா் ராமச்சந்திரன் வழங்கினாா்.

இதில் திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் பாபு, திமுக ஒன்றியச் செயலா்கள் பாலகணேசன், பொன்ராஜ், ஒன்றியக் குழுத் தலைவா் சசிகலா பொன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com