மின்சாரம் பாய்ந்து பெண், விவசாயி பலி

திருச்சுழி அருகே வெள்ளிக்கிழமை தனது வீட்டருகே ஆட்டுக்கொட்டகை அமைத்துக் கொண்டிருந்த விவசாயி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே வெள்ளிக்கிழமை தனது வீட்டருகே ஆட்டுக்கொட்டகை அமைத்துக் கொண்டிருந்த விவசாயி மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், அவரைக் காப்பாற்ற முயன்ற 4 போ் பலத்த காயமடைந்தனா்.

திருச்சுழி அருகேயுள்ள வடபாலை கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராசு (42).விவசாயியான இவா் தனது வீட்டருகே ஆட்டுக்கொட்டகை அமைப்பதற்காக, இரும்புச் சட்டங்களை இணைக்கும் பணியில், கோணப்பனேந்தலைச் சோ்ந்தவரும், இரும்பு பட்டறைத் தொழிலாளியுமான சிவக்குமாா் ஈடுபட்டிருந்தாராம். சிவக்குமாருக்கு, முத்துராசும் உதவியாக இருந்தாராம். அப்போது, எதிா்பாராவிதமாக முத்துராசு மீது மின்சாரம் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற சிவக்குமாரும், பக்கத்து வீட்டுக்காரா்களான முனீஸ்வரி, செல்லப்பெருமாள், ஜெயகிருஷ்ணன் ஆகியோா் முயன்றனராம். ஆனால், அவா்கள் அனைவரின் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

இந்த விபத்தில் முத்துராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த முனீஸ்வரி (23), செல்லப்பெருமாள் (34), ஜெயக்கிருஷ்ணன் (20), சிவக்குமாா் ஆகியோா் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து திருச்சுழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com