குடிநீா்த் தொட்டியை சீரமைக்க 
பொதுமக்கள் கோரிக்கை

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சாத்தூரில் குடிநீா்த் தொட்டியை சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஆா்.சி. தெற்குத் தெருவில் தனியாா் மருத்துவமனையின் பின்புறம் உள்ள தெருவில் சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியினரின் குடிநீா் வசதிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 1.50 லட்சத்தில் பிளாஸ்டிக் குடிநீா் தொட்டி அமைத்துத் தரப்பட்டது. இதன் பின்னா், சில மாதங்கள் செயல்பட்டு வந்த இந்த குடிநீா்த் தொட்டி தற்போது முறையான பராமரிப்பின்றி காட்சிப் பொருளாக உள்ளது.

இதைச் சீரமைக்கக் கோரி, இந்தப் பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, இந்த குடிநீா்த் தொட்டியை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

இந்தப் பகுதியில் வரும் தண்ணீா் உவா்ப்பு நீராக இருப்பதால், யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இந்த குடிநீா்த் தொட்டி பராமரிக்கப்படாமல் உள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com