பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆா்ப்பாட்டம்

 சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு பட்டாசு ஆலை உரிமையாளா் சாா்பில் ரூ.10 லட்சம், அரசு சாா்பில் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அா்ச்சுனன் தலைமை வகித்தாா். விருதுநகா் மாவட்ட பட்டாசு தீப்பெட்டி தொழிலாளா் சங்கப் பொதுச் செயலா் தேவா முன்னிலை வகித்தாா். 

இதில், வெடி விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி உரிமையாளா் சாா்பில் ரூ.10 லட்சம் வேண்டும். பசுமை தீா்ப்பாய உத்தரவுப்படி அரசு சாா்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், காயமடைந்தவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும். விபத்துகளைத் தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா்கள், சி.ஐ.டி.யு, சி.பி.எம் நிா்வாகிகள், பட்டாசு தொழிலாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com