திருவாரூர் அரசு மருத்துவமனையில் பல் சிகிச்சைக்கான நவீன நாற்காலி

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை முதல் அதிநவீன பல் சிகிச்சை நாற்காலி பயன்பாட்டுக்கு

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை முதல் அதிநவீன பல் சிகிச்சை நாற்காலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நவீன பல் சிகிச்சை நாற்காலியின் பயன்பாட்டைத் தொடங்கி வைத்து மேலும் அவர் கூறியது: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பல் சிகிச்சைக்காக நாள்தோறும் 50 முதல் 60 நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
அவர்களுக்கான சிகிச்சை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.5 லட்சம் செலவில் டென்ட்டல் கேர் எனப்படும் அதிநவீன நாற்காலி வாங்கப்பட்டது.
இதில் பொருத்தப்பட்டுள்ள சுவிட்ச் மூலம் நாற்காலியை முன்னும், பின்னும் நகர்த்தி சாய்மான பகுதியை தேவையான அளவு சாய்த்துக்கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவும் முடியும். நோயாளியின் வாய்ப்பகுதியை பரிசோதிப்பதற்காக அதிநவீன விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கையுறைகளை அணிந்து கொண்டு பணியாற்றும் மருத்துவர் நாற்காலியை தொடும்போது கிருமி தொற்று ஏற்படும் என்பதால் காற்றசைவில் விளக்குகள் எரியும் வண்ணம் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
நாற்காலியில் இணைக்கப்பட்டுள்ள கருவி மூலம் எக்ஸ்ரே எடுக்கும் வசதி உள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின் மோட்டார் மூலம் பற்களை சுத்தம் செய்யவும், ஈறு உபாதைகளுக்கு சிகிச்சையளிக்கலாம். பற்குழி, பற்களில் கரை படிதல் போன்றவைகளுக்கு எளிதாக சிகிச்சை அளிக்க முடியும்.
நோயாளி வாய்கொப்பளிக்கும் வகையில் நாற்காலியிலேயே வாஷ்பேசின் அமைக்கப்பட்டுள்ளது என்றார் மீனாட்சிசுந்தரம்.
நிகழ்ச்சியில், மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் சுந்தர், பல் சிகிச்சைத் துறை மருத்துவர்கள் அனிதா, ரூபாகுந்தவை, உதவி நிலைய மருத்துவர்கள் அருண் குமார், தினேஷ்கண்ணா, செவிலிய கண்காணிப்பாளர் ராதா, மருத்துவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com