திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக மு. தனபால் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிய பாரதிதாசன் தர்மபுரி மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக திருவள்ளூர் மாவட்ட செய்தி தொடர்பு அலுவலராக பணியாற்றிய மு. தனபால் திருவாரூர் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டதையடுத்து திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.