திருமீயச்சூர் கோயிலில் ரத சப்தமி விழா தொடக்கம்

திருவாரூர் அருகேயுள்ள திருமீயச்சூர் அருள்மிகு மேகநாதர் கோயிலில் ரத சப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. 

திருவாரூர் அருகேயுள்ள திருமீயச்சூர் அருள்மிகு மேகநாதர் கோயிலில் ரத சப்தமி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. 
 திருமீயச்சூர் அருள்மிகு மேகநாதர்  கோயில், சிவனின் தேவாரப் பாடல் பெற்ற  சிவாலயங்களில் 119  ஆவது தேவாரத்தலம் ஆகும். இங்கு  லலிதாம்பிகை  ஸ்ரீசக்ர  பீடத்தில் அபய, வரத , ஹஸ்த  முத்திரையுடன் வலது காலை  மடித்து  இடது  காலை தொங்கவிட்டு, அருள்பாலிப்பது இங்கு மட்டுமே காணக் கிடைக்கும் அற்புத் காட்சி.   
மேகநாதர் கோயிலில் ரதசப்தமி விழாவுக்காக புதிதாக தேர் நிர்மாணிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்நிலையில், ரதசப்தமி விழாவுக்கான கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு வீதியுலா நடைபெற்றது. பின்னர், சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து, 10 மணிக்கு விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாங்குறிச்சி ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், பொருளாளர் பா. வேங்கடகிருஷ்ணன் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா நிகழ்ச்சிகளாக, இடபவாகன காட்சி ஓலைச்சப்பரம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. விழா முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஜன.23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com