கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியரின் நேர்முகக் கூடுதல் உதவியாளர் ( நிலம்) பால்துரை தலைமை வகித்தார். வட்டாட்சியர் செல்வி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சமூக நல பாதுக்காப்புத் திட்டத் தனி வட்டாட்சியர் க. அன்பழகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் எம். சரவணன், வருவாய் ஆய்வாளர்கள் கூத்தாநல்லூர் ராஜேஸ்வரி, வடபாதிமங்கலம் கே. அசோகன், கமலாபுரம் சத்யா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில், கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்குவது குறித்தும், பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து விடுபடாமல் சரியான முறையில் காணக்கெடுத்து, இடிந்த வீடுகளின் புகைப்படத்துடன் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com