மாநில சித்த மருத்துவர் கழகக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில சித்த மருத்துவர் கழகத்தின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில சித்த மருத்துவர் கழகத்தின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வர்த்தகர் சங்க கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாநில தலைவர் பால. ரவீந்திரன் தலைமை வகித்தார். தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரி தாளாளர் பால. பாரதிதாசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு இன்காப் கூட்டுறவு மருந்தகத்தின் மூலமாக மரபு முறை வைத்தியர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கி, அந்த கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். வரும் 30-ஆம் தேதி தஞ்சையிலும், அக். 2-இல் திருச்சியிலும், 7-இல் சுருலி மலையிலும் நடைபெறவுள்ள சித்த மருத்துவ கருத்தரங்கில் அனைவரும் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மரபு மருத்துவர்கள் தேவூர் மணிவாசகம், மேலக்கொறுக்கை மரபு ஆசான் நாராயணசாமி, அம்பகரத்தூர் இளமுருகன், நாகை சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். துணைச் செயலர் பன்னால் ராமதாஸ் வரவேற்றார். தமிழ்செல்வி முருகையன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com