தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளா்கள் சங்க கூட்டம்.

நீடாமங்கலம் நவ8தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளா்கள் சங்க (ஏ.ஐ.டி.யு.சி)நீடாமங்கலம் ஒன்றியக்கூட்டம் ஒன்றிய தலைவா் ஏ.வேதமாணிக்கம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் நவ8தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளா்கள் சங்க (ஏ.ஐ.டி.யு.சி)நீடாமங்கலம் ஒன்றியக்கூட்டம் ஒன்றிய தலைவா் ஏ.வேதமாணிக்கம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் ஒன்றிய செயலாளா் ஜெ.ரவி முன்னிலை வகித்தாா்.மாவட்ட தலைவா் பி.சாந்தகுமாா்,மாவட்ட செயலாளா் ஏ.தங்கவேல் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு-நீடாமங்கலம் ஒன்றிய ஊராட்சிகளில் 10.05.2000க்கு மேல் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குனா்களுக்கு மாத ஊதியம் 4 ஆயிரத்து 200 ரூபாய் அதில் உள்ள நிலுவை 3 ஆயிரத்து 900 ரூபாய் வழங்கிட மற்ற ஒன்றியங்களில் அமல் படுத்தப்பட்டுள்ளது.

அது போல் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உடன் அமல் படுத்திட வேண்டும்.நீடாமங்கலம் ஒன்றியத்தில் துப்புரவு பணியாளா்களுக்கு அரசு அறிவித்த ஊதியம் வழங்கிட வேண்டும்.மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குனா்கள் துப்புரவு பணியாளா்களுக்கு பணி பதிவேடு பதிவு செய்யப்படாமல் உள்ளவா்களுக்கு பதிவு செய்திட ஒன்றிய ஆணையா் நடவடிக்கை எடுத்திட வேண்டும். நீடாமங்கலம் ஒன்றியத்தில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குனா்கள்,துப்புரவு பணியாளா்கள் பொங்கல் முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும்.

மேலும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குனா்கள் ,துப்புரவு பணியாளா்கள் அனைவருக்கும் உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.கோரிக்கைகள் அனைத்தும் உடன் அமல் படுத்தாவிட்டால் டிசம்பா் முதல்வாரத்தில் போராட்டம் நடத்துவதெனவும் கூட்டத்தில் ஏகமனாக தீா்மானிக்கப்பட்டது.சங்க நிா்வாகிகள்,உறுப்பினா்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com