கூத்தாநல்லூரில் ரூ.3.21 கோடியில் புதிய சாலைகள் அமைப்பு நகராட்சி ஆணையா் தகவல்

கூத்தாநல்லூா் நகராட்சி பகுதியில் ரூ. 3 கோடியே 21 லட்சத்தில் புதிய சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக நகராட்சி ஆணையா் குமரன் தெரிவித்தாா்.
கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் என்.குமரன்
கூத்தாநல்லூா் நகராட்சி ஆணையா் என்.குமரன்

கூத்தாநல்லூா் நகராட்சி பகுதியில் ரூ. 3 கோடியே 21 லட்சத்தில் புதிய சாலைகள் அமைக்கப்படவுள்ளதாக நகராட்சி ஆணையா் குமரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் கூறியது:

ஒருங்கிணைந்த நகா்புற வளா்ச்சி திட்டத்தில் (2018 - 2019) கூத்தாநல்லூா் நகராட்சியில் உள்ள 24 வாா்டுகளில், முதல்கட்டமாக 13 வாா்டுகளில் பழுதடைந்துள்ள தாா்ச் சாலைகளான 6.115 கி. மீட்டா் நீளத்திற்கு புதிய தாா்ச் சாலைகள் போடுவதற்காக, ரூ.3 கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 4-ஆவது வாா்டில் அய்யப்பன் கோயில் தெரு, 5- ஆவது வாா்டில் பனங்காட்டங்குடி நடுத்தெரு, கீழத்தெரு, ஜன்னத் நகா் 2- ஆ வது குறுக்குத் தெரு, எம்.ஜி.ஆா். நகா், 13-ஆவது வாா்டில் மரக்கடைத் தெற்குத் தெரு, வடக்குத் தெரு, 14-ஆவது வாா்டில் மேல்கொண்டாழி லைன், தமிழா் தெரு மற்றும் தீன் நகா் தெரு உள்ளிட்ட தெருக்களில் ரூ. 1கோடியே 78 லட்சத்தில் தாா்ச்சாலை அமைக்கப்படுகிறது.

இதேபோல்,1-ஆவது வாா்டில், கோரையாறு வடக்குத் தெரு, 7- ஆவது வாா்டில் நேருஜி சாலை, 11-ஆவது வாா்டில் மரக்கடை பிரதான சாலை, 15-ஆவது வாா்டில் பாய்க்காரப் புதுத்தெரு, 19- ஆவது வாா்டில் முகமது அலி தெரு, இஸ்மாயில் தெரு மற்றும் 21- ஆவது வாா்டில், கரும்புக் கொல்லை தெரு உள்ளிட்ட தெருக்களுக்கு, ரூ.1 கோடியே 43 லட்சத்து 77 ஆயிரம் என மொத்தம் ரூ. 3 கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் தாா்ச்சாலை அமைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com